Wednesday, March 7, 2018
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மகளிர் சுய
உதவிக்குழு உறுப்பினராக உள்ள மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தி வரும்
வட்டாரங்களை சார்ந்த களப்பகுதிகளில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மகளிர்
சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ள மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், குறைந்தது 12 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் செல்லிடப்பேசி மற்றும் கணினி இயக்கத்
தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
சமுதாய ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மாதாந்திர மதிப்பூதியமாக
ரூ. 2 ஆயிரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மூலம் வழங்கப்படும்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்
குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று உதவுதல், குழுக்கள் பெற்ற கடனை
திருப்பிச் செலுத்துவதை கண்காணித்தல், வங்கிகளால் நடத்தப்படும்
கடன் வழங்கும் முகாம்களுக்கு உதவுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விரும்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை
திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
ஆட்சியர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்-623503
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment