வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Monday, March 19, 2018

ராமநாதபுரம் நகரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!!

1 comment :
ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ரோமன்சர்ச் பகுதிக்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் ரோமன் சர்ச் பகுதியில் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு காவிரி குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படு கிறது. இந்தநிலையில் கடந்த பல நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் ரூ.முதல் ரூ.10 கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக தனியார் லாரிகளும் வரவில்லை. தண்ணீர் எடுத்துவரும் பகுதியில் தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளதால் தண்ணீர் எடுக்க முடியவில்லை என்று கூறி தனியார் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் லாரியும் வரவில்லை.

காவிரி தண்ணீர், தனியார் லாரி எதுவும் கிடைக்காததால் நாங்கள் அனைவரும் குடிநீருக்காக சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

1 comment :

 1. கண்ணீர் மல்க வேண்டுகிறோம்...😭😭😭😭😭


  🤮🤮🤮🤮
  ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகி உள்ளது .
  இராமநாதபுரம் மாவட்டம்
  திருவாடணை வட்டம
  R.S.மங்கலம் .உப்பூர். அருகே உள்ள
  ""கீழச்சித்தூர்வாடி""

  கிராமத்தில் தான் இந்த நிலை கடந்த 2 வருடமாக குடிநீர் பற்றாக்குறை ஏட்பட்டு உள்ளது
  பெண்கள் குழந்தைகள் என சுமார் 150 பேர் தண்ணீர் எடுக்க தினமும் 3 km தூரம் செல்ல வேண்டி உள்ளது கடந்த ஒரு மாதமாக அதுவும் இல்லை. அங்கே உள்ள அனைவரும் குளிக்கவும் , குடிக்கவும் மற்றும் வாயில்லா ஜீவன்களுக்கும் தண்ணீரை விலை குடுத்து வாங்கும் நிலை உள்ளது. எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள் விலை குடுத்து தண்ணீர் வாங்கி எங்களால் வாழ்க்கை நடத்த முடியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை. எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர் மீதம் உள்ள மக்களை காப்பாற்ற உங்களை நாடி உள்ளோம் ..plz நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஷேர் மட்டுமே எல்லாருக்குமே தெரியும் இந்திய சட்டத்திட்டத்தின் படி whatsapp ல் 1,50,00,00 பேரால் ஒரு பதிவு ஷேர் செய்ய பட்டால் போதும் மத்திய உளவு துறையில் ஒரு கவனத்தை திசை திருப்பும் அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு நன்மையே இவை அனைத்தும் நீங்கள் செய்யும்
  3 share
  மட்டுமே plz

  3×3=9
  9×3=27
  27×3=81
  81×3=213
  213×3=639
  639×3=1920
  1920×3=6340
  6340×3=24060
  24060×3=73040
  73040×3=2,23,458
  2,23,458×3=808965
  8,08,965×3=24,04,525
  24,04,527×3=72,45,459
  72,45,459×3=2,14,45,828

  தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி
  கண்டிப்பாக அதை முடியும் தலை எழுத்தை மாற்ற plz🙏🏽🙏🏽🙏🏽


  கடைசியில் தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
  எதை எதையோ share செய்யும் நாம்

  தமிழகத்தின் நன்மைக்காக ஒரு ஷேர் plz

  நீ ஒரு தமிழன் என்றால் share செய்யவும்...plz
  🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  ReplyDelete