(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 2, 2018

மின் விளக்குகள் பழுதால் இருளில் ராமநாதபுரம் ரயில் நிலையம்!!

No comments :
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இரவில் மின் விளக்குகள் சரியாக எரியாததால் பயணிகள் அச்சத்துடன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திருப்பதி, வாரணாசி, கோவை, சென்னைக்கு, ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் சென்னை, மதுரை, கன்னியாகுமரிக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர்.


ரயில் நிலையத்தின் மத்திய பகுதியில் மட்டும் மின் விளக்குகள் உள்ளன. ரயில் நிற்கும் முன் பகுதியிலும், கடைசிப்பகுதியிலும் மின் விளக்குகள் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக முன் பதிவில்லாத பெட்டியும், பெண்கள் பெட்டியும் கடைசிப்பகுதியில் இருப்பதால், பெண்கள் பயத்துடன் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

ரயில்வே நிர்வாகத்தினர் ரயில் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் வசதியினை செய்து பயணிகளின் அச்சத்தை தீர்க்க வேண்டும்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment