(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 10, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் 75 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் உட்பட 557 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியது: பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய 355 புதிய குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 113 இடங்களில் உப்புநீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து புகார் வரும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ஜெகஜோதி உட்பட அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


செய்தி; தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment