(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 17, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை, சிறப்பு தொழுகை!!

No comments :
ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
ராமநாதபுரம் மதுரை ரோட்டில், ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள ஈத்கா மைதானத்தில், காலை 9:00 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பின் ரம்ஜான் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
பின், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதே போல், நகரில் சில இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, புதுவலசை, சாத்தான்குளம், பெருங்குளம், கீழக்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

கீழக்கரை: கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல், கடற்கரைப்பள்ளி, மின்ஹாஜியார் பள்ளி, ஜும்மா பள்ளி, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு புதுப்பள்ளி,ஓடைக்கரைப்பள்ளி, உள்ளிட்ட இடங்களில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.திடல் தொழுகை காலை 7:30 முதல் 10:30 வரை நடந்தது.


பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில்நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிக்கல்: சிக்கல் ஜாமியா மஸ்ஜித் பள்ளியில்மவுலவிமுகம்மது சம்சு மீரான் தலைமையில் சிறப்பு தொழுகையில்பங்கேற்றனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, உலக நன்மைக்காகவும், சிக்கல் பள்ளிவாசலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் வரை தேசியக்கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம்: ரம்ஜானை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் ஜூம்மா பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்ற முஸ்லிம் ஜமாத்தார்கள் பெரிய கண்மாய் பாலம் அருகே ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment