(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 13, 2018

மானிய விலையில் வேளாண் கருவிகள், ராமநாதபுரத்தில் 25 கிராமங்கள் தேர்வு!!

No comments :
விவசாயிகள் நலவாழ்வு இயக்கத்தின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படுகின்றன.

நமது ராமநாதபுர மாவட்டத்தில் புல்லங்குடி, வன்னிவயல், அலமனேந்தல்,பெரியபட்டினம், தளிர்மருங்கூர், தேளூர், ஆக்களூர், கட்டவளாகம், கீழப்பனையூர், சீனங்குடி, வெங்காளூர், அரியகுடிபுத்துார், நகரம், ஆட்டாங்குடி, மேலக்கொடுமலுார், குமாரக்குறிச்சி, சடையனேந்தல், கீழராமநதி, காடமங்கலம், ஆணையூர், நகரத்தார்குறிச்சி, காக்குடி, கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, மேலச் செல்வனுார் ஆகிய 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், டிராக்டர்களால் இயங்கும் கலப்பை உள்ளிட்ட 105 வேளாண் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்குவதற்காக 97.05 லட்சம் ரூபாயும், மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் 12 கருவிகள் வழங்க 13.87 லட்சம் ரூபாய் மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் டிராக்டருக்கு அதிகபட்சம் 1.25 லட்சம், பவர் டில்லருக்கு 75
ஆயிரம், டிராக்டர் மூலம் இயங்கும் கருவிகள், கலப்பை வாங்க 63 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.


ராமநாதபுரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04567-230 543 என்ற தொலைபேசியிலும், பரமக்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04564-224 044 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் நடராஜன் அறிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment