(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 23, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 63 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா கோரி தோப்பு மைதானத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஜாமத்தார்கள் முன்னிலையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் கேணிக்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட 11 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

பரமக்குடியில் நகர் பகுதி, எமனேஸ்வரம், பார்த்திபனுார் உள்ளிட்ட 5 இடங்கள், கமுதி அபிராமத்தில் அலி அப்பா மைதானம், ராமேஸ்வரம் நகர், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி உள்ளிட்ட 16 இடங்கள், கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி தர்கா, வாலிநோக்கம், சாயல்குடி, உத்திரகோசமங்கை உட்பட 12 இடங்கள், திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம்,திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உட்பட 17 இடங்கள், முதுகுளத்துார் உட்பட மாவட்டத்தில் 63 இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன.


கீழக்கரை: கீழக்கரையில் பள்ளிவாசல்கள், திடல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. கிழக்குத்தெரு அப்பா பள்ளி, குளங்கரைப்பள்ளி, மேலத்தெரு புதுப்பள்ளி, ஓடைக்கரைப்பள்ளி, பழைய குத்பா பள்ளி, ஜூம்மா பள்ளி, வடக்குத்தெரு, தெற்குத்தெரு பள்ளி, கடற்கரை பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது. பெண்கள் தொழுகை செய்ய தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.

பெரியபட்டினம்: அல்மஜ்ஜிதுல் பலா சிங்காரப்பூங்கா பள்ளி வாசலிலும், ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிகளிலும் ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ். மங்கலம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் அருகே ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து ஈத்கா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற ஜமாத்தார்கள் ஜூம்மா பள்ளியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து வீடுகளின் முன்பு குர்பானிக்காக ஆடுகள் பலியிடப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.

தொண்டி: தொண்டியில் வெள்ளைமணல் தெருவில் உள்ள திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
ஏராளமானோர் கலந்து கொண்டனர். நம்புதாளை, மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம் போன்ற கிராமங்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment