Wednesday, August 29, 2018
தனியார் கல்லூரியிடமிருந்து அசல் சான்றிதழ்களை ஒரே நாளில் பெற்றுத்தந்த ராமநாதபுர மாவட்ட கலெக்டர்!!
அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததைத் தொடர்ந்து கீழக்கரை
தனியார் பொறியியல் - கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து மாணவரின் அசல் கல்விச்
சான்றிதழ்களை ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், பெற்று
செவ்வாய்க்கிழமை மாணவரிடம் ஒப்படைத்தார்.
ராமநாதபுரத்தை அடுத்த ரெகுநாதபுரம் பகுதி கும்பரம்
கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மு.பாரதிராஜா(17). இவர் தனது தந்தை
முருகானந்தத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில்
ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள
தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படிக்க ரூ.20ஆயிரம்
பணமும், அசல் சான்றிதழ்களையும் கொடுத்திருந்தோம். இதன் பின்னர் ராமநாதபுரம் அரசு பொறியியல்
கல்லூரியில் சேர இடம் கிடைத்து விட்டது. அதனால் அத்தொகையையும், அசல்
சான்றிதழ்களையும் திருப்பித் தருமாறு கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி
நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் தரவில்லை. அவற்றைப் பெற்றுத் தருமாறு மனுவில்
தெரிவித்திருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர். ராமநாதபுரம் சார் ஆட்சியர்
ஆர்.சுமனிடம் தனியார் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து உடனடியாக சான்றிதழ்களை
பெற்றுத்தருமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சார் ஆட்சியர் தனியார் கல்லூரி
நிர்வாகத்திடம் பேசி ரூ.20
ஆயிரத்தையும், மாணவரின் அசல் சான்றிதழ்களையும்
திங்கள்கிழமையே பெற்றுத் தந்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர் எம்.பாரதிராஜாவும், அவரது
தந்தையும் - செவ்வாய்க்கிழமை ஆட்சியரை சந்தித்து அசல் சான்றிதழையும், ரூ.20 ) ஆயிரத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஒரே நாளில் கல்விச்சான்றிதழை பெற்றுத் தந்தற்கு மாவட்ட ஆட்சியர்
கொ.வீரராகவ ராவிற்கு மாணவர் நன்றி தெரிவித்தார்.
செய்தி; தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment