(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 3, 2018

ராமேஸ்வரம் கோயில் தீர்த்த குளத்தில் சுகாதராமில்லை என்று பக்தர்கள் அதிருப்தி !!

No comments :
ராமேஸ்வரம் கோயில் தீர்த்த குளத்தில் பாலிதீன் பை, பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். 

கோயிலில் தீர்த்தக்குளம், கிணற்றை சுற்றி படிந்து கிடக்கும் பாசியை, கோயில் துப்புரவு ஊழியர்கள் அகற்றி பராமரிக்காமல் கிடப்பில் போடுவதால், பக்தர்கள் நீராட வரும் போது வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.மேலும் 2ம் பிரகாரத்தில் பக்தர்கள் நீராடிய பிறகு தேங்கும் கழிவு நீர்,பக்தர்கள் விட்டு சென்ற துணிகளை அகற்றாமல் அப்படியே விடப்படுகிறது. 

கோயிலில் பிரசித்தி பெற்ற சேதுமாதவர் தீர்த்த குளத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள்பாலிதீன் பைகள் மிதந்தும், இங்குள்ள படிக்கட்டுகளில் மண்சகதி, பாலிதீன் பை கழிவுகளை அகற்றாமல் உள்ளதால், நீராட வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.புனித தீர்த்த குளம், கிணறுகளை சுற்றி பாசி, குப்பையை தினமும் அகற்றி சுகாதாரம் பராமரித்து கோயில் புனிதம் காக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment