(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 9, 2018

ராமநாதபுரம் மாவட்ட விவசாய சாகுபடிக்காக வைகை நீர் திறக்கப்படுகிறது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட விவசாய சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (செப்.10) முதல் வினாடிக்கு 1559 கன அடி தண்ணீ ர் திறக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் பெரியகண்மாய் தென்கலுங்கிலிருந்து வைகை அணை தண்ணீர் வரும் பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் வர வேண்டுமானால், வினாடிக்கு 1800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், திங்கள்கிழமை (செப்.10) முதல் வரும் 27 ஆம் தேதி வரை வினாடிக்கு 1559 கன அடி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு பிறகும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திறந்து விடப்படும் அளவைவிட மேலும் 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி, விவசாயம் செழிக்கும்.



இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளேன். ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த கிராமங்களுக்கு வரவில்லை என்றாலும் என்னிடம் தெரிவிக்கலாம். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், பொதுப்பணித்துறை கீழ்வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் தஞ்சி.சுரேஷ் ஆகியோர் உள்பட அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment