முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 11, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 39,606 பேர் இன்று குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 906 பேர் இன்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 தேர்வு இன்று(பிப்.11) நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் எழுதுகின்றனர்.இதையடுத்து, முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் நடராஜன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.கலெக்டர் நடராஜன் பேசுகையில், தேர்வில் முறைகேடு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தாலுகாவிற்கு ஒரு குழு வீதம் எட்டு பறக்கும் படை குழுக்களும், 37 நிறுத்தும் படை குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் கோட்டாட்சியர் பேபி, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)