முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Tuesday, February 13, 2018

ராமநாதபுர மாவட்டம், ஏர்வாடி அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது!!

No comments :
ராமநாதபுர மாவட்டம், ஏர்வாடி அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டதுவிருதை அமைச்சர் திரு. செங்கோட்டையன் வழங்க தலைமை ஆசிரியை திருமதி.தமிழரசி பெற்றுக்கொண்டார்.

செய்தி: திரு. தாஹீர், கீழை(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல்; 65 பேர் கைது!!

No comments :


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.சாலை மறியலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், இ.கண்ணகி, முத்துராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேருந்துப் பயணக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்த 8 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)