முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Wednesday, February 14, 2018

ராமநாதபுரம் அருகே பேருந்து விபத்துக்குள்ளானது; 5 பேர் காயம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே லாந்தை காலனியில் அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர். 

ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. லாந்தை கிராமப்பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசுப்பேருந்து, தனியார் பேருந்து மீது மோதியது. 

இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பரமக்குடி பெரும்பச்சேரியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஈஸ்வரி (40), கடம்போடை கிராமம் மாதவன் மகள் கார்த்திகா (18), ஆலங்குளம் ராமு மகன் வேலுமணி (61), திருப்பத்தூர் தாவூத்கான் மகன் ஆரோன் அல் ரசீது (37) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான மதுரையை சேர்ந்த குமரனிடம் விசாரணை நடந்தி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதா 65 பேர் கைது!!

No comments :
ரயில்வேத்துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 65 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். 

ரயில்வேத்துறையை தனியார்மயமாக்குவது, பணி ஓய்வு பெற்றவர்களை ரயில்வேத்துறையில் நியமிக்க எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் முயற்சி நடைபெற்றது. 

திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது ரயில் நிலையம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆதிரெத்தினம் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு டி.எஸ்.பி எஸ். நடராஜ் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் 65 பேரை கைது செய்தனர். 

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)