முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, February 19, 2018

சென்னையில் வரும் பிப்- 24ம் தேதி இலவச வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
அன்னம்மாள் இன்ஸ்ட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 


இதில், உலக புகழ்பெற்ற சொகுசு கப்பல் நிறுவனங்கள், 5 ஸ்டார், 3 ஸ்டார் ஹோட்டல்கள் பங்கேற்கின்றன. இந்த முகாமில் 8, 10, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து துறை டிப்ளமோ, பட்டதாரி படித்தவர்களும், படித்து கொண்டிருப்பவர்களும் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம். 

கிச்சன், ஹவுஸ் கீப்பிங், ப்ரன்ட் ஆப்ஸ், எச்.ஆர்.அக்கவுன்ட்ஸ், பொறியாளர், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், பார்ஸ் மற்றும் பப்ஸ், பர்ச்சேஸ், செக்யூரிட்டி, கிளீனிங், டிரைவர், பிளம்பிங், எலக்ட்ரீசியன் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. 

முகாமில் பங்குபெறுவோர் குறைந்தபட்சம் 10 பையோ டேட்டா கொண்டு வர வேண்டும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை புதிய தாலுகா அலுவலக கட்டிட பணி துவக்கம்!!

No comments :
கீழக்கரையை தனி தாலுகாவாக அரசு அறிவித்து 14.3.2015 முதல் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஒரு பகுதியிலும், மலேரியா மருத்துவமனையில் ஒரு பகுதியிலும் தாலுகா அலுவலகம் தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் செயல்பட்டு வருகிறது. 

இந்த தாலுகா அலுவலகத்தில் போதுமான இடவசதியில்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 56 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒன்றரை வருடம் ஆகியும் பணிகள் துவங்கவில்லை என்றும் விரைந்து கட்டுமான பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோர்க்கையை தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு பணி தொடங்குவதற்கு அமைச்சர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார். 

இதில் கலெக்டர் நடராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு; பயணிகள் அவதி!!

No comments :

மண்டபம் முகாம் ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேஸ்வரம்மதுரை இடையே காலைநண்பகல்மாலை என வேளைகளில் பயணிகள் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது மண்டபம் முகாம் சிறிய அளவிலான ரயில் நிலையமாக இருந்தது. அகல ரயில் பாதைக்காக பழைய ரயில் நிலையம் உடைக்கப்பட்டு புதிய ரயில்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாம் பகுதியில் மத்தியமாநில அரசு அலுவலகங்கள்பள்ளிகள்மருத்துவமனைகள்இலங்கை அகதிகளுக்கான சப்.கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளதால் தினமும் நூற்றுக்கனக்கான பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வழித்தடத்தில் ராமநாதபுரம்சத்திரக்குடிபரமக்குடிதிருப்புவனம்மதுரை செல்வதற்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் மண்டபம் முகாமிலிருந்து பரமக்குடி செல்வதற்கு மானாமதுரை டிக்கெட் எடுத்து பரமக்குடி உள்ளிட்ட சம்மந்தப்பட்ட ரயில்நிலையத்தில் இறங்க வேண்டிய உள்ளது. இதேபோல் மதுரைக்கு டிக்கெட் இல்லாததால் மானாமதுரைக்கு எடுத்தபிறகு அங்கு இறங்கி பயணிகள் மீண்டும் மதுரைக்கு டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. 
சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் தேவையை கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுரை வழித்தடத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மண்டபம் கேம்பை சத்தியேந்திரன் கூறுகையில், மண்டபம் முகாமிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கு கூட மானாமதுரை டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. மதுரை செல்வதாக இருந்தால் மானாமதுரை வரையே டிக்கெட் கிடைக்கிறது. அதன்பிறகு மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்று திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டு விடுகிறது. தற்போது பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் போக வேண்டிய இடத்திற்கு டிக்கெட் எடுக்காமல் செல்லாத இடத்திற்கு கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியுள்ள நிலை உள்ளதால் கடும் சிரமம் அடைந்து வருகிறோம் என்று கூறினார்.

மண்டபம் ரயில்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து ஏற்கனவே புகார் வந்தது. ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியுள்ளோம். உயர் அதிகாரிகள்தான் விரைவில் முடிவு செய்து விரைவில் அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?

மண்டபம் கேம்பை அடுத்து எந்தவொரு ரயில்நிலையத்திலும் ரயில் அதிக நேரம் நிற்பது கிடையாது. மதுரை செல்லும் பயணிகள் உயரமான பிளாட்பாரம் காரணமாக ராமநாதபுரத்திலோ, பரமக்குடியிலோ அல்லது மானாமதுரையிலோ ரயிலை விட்டு இறங்கி டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். வயதான பயணிகளாக இருந்தால் வண்டியிலிருந்து இறங்கி டிக்கெட் கவுண்டருக்கு சென்று மீண்டும் அதே பெட்டியில் ஏறுவது என்பது சிரமமான ஒன்று. சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினகரன்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அம்மா பூங்காவை சீரமைக்க கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியை ஒட்டிய பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பின்றி உருக்குலைந்து வருவதால், இதனை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகப் பகுதியில் சாக்கடை நீர் தேங்கும் இடமாக இருந்ததை, முந்தைய கலெக்டர் நந்தகுமார் முயற்சியால் பூங்காவாக மாற்றப்பட்டது.
அன்வர்ராஜா எம்.பி., நிதி, ஊரக வளர்ச்சி முகமை நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை பயன்படுத்தி இதுவரை பூங்கா சீரமைப்பிற்காக 1.60 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் உள்பகுதியை சுற்றிலும் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா நடுவில்
சமீபத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. மேலும், உள்பகுதியில் ஊஞ்சல், சறுக்குகள், பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பூங்காவின் கிழக்கு பகுதி தெற்கு மூலையில் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

இவை சேதமடைந்த நிலையில், இரண்டுமுறை சரி செய்யப்பட்டது. தரமற்ற பணியால் தற்போது, மூன்றாவது முறையாக உடற்பயிற்சி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்த பூங்காவிற்குள் தான் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு நடந்தது.
அப்போது, இங்கு வந்த கூட்டத்தால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வளர்ந்திருந்த பல மரங்கள் அழிக்கப்பட்டன. மேலும், பூங்கா முழுவதும், கரடு முரடாக, பந்தல் குழிகள் தோண்டப்பட்டது கூட இன்னும் அப்படியே விடப்பட்டுள்ளது.

இங்குள்ள ஊஞ்சல்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது வெறும் காட்சிப் பொருளாகத்தான் பூங்கா உள்ளது.

மொத்தத்தில் பூங்கா தற்போது, பயனற்ற நிலைக்கு மாறிவிட்டது. நகர மக்களின் ஒரு பொழுது போக்கு இடமான அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும்என்பதே மக்களின் விருப்பம்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)