முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 1, 2018

பனைமர தொழிலாளர்களுக்கு மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன்!!

1 comment :
ராமநாதபுரம் பனை ஏறும் தொழிலாளர்களை கந்து வட்டியில் இருந்து பாதுகாக்க பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.

சாயல்குடி, கன்னிராஜபுரம், மாரியூர், நரிப்பையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனை தொழிலாளர்கள் உள்ளனர். 

இவர்கள் கருப்பட்டி காய்ச்சி விற்பதற்காக உபகரணங்கள் வாங்க, பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில், பெண்களுக்கு 35 சதவீதம் மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.


இப்பகுதிகளில் உள்ள 350 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதில் மானியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான நேர்காணல் மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பூங்கா!!

No comments :

ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில் தலா 100 ஏக்கரில் சிட்கோ தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், சக்கரக்கோட்டை ஊராட்சி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே 100 ஏக்கரில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், 'ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா' அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


இங்கு, மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வோர், மீன் எண்ணெய், மீன் உணவு, நண்டு, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட கடல் உணவு சார்ந்த தொழில்களை இங்கு துவக்கலாம். 
ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாய் நிலத்திற்கான தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதே போல், கரூர் பாஞ்சாலங்குறிச்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் ஒருங்கிணைந்த 
தொழில்நுட்ப ஜவுளி பூங்கா, தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியில் 
ஒருங்கிணைந்த உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)