முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 10, 2018

கீழக்கரைக்கு புதிய காவல் நிலைய கட்டிடம்!!

No comments :
கீழக்கரைக்கு புதிய காவல் நிலைய கட்டிடம். தமிழக முதல்வர் அறிவிப்பு.

கீழக்கரை காவல் நிலைய கட்டிட்டம் 1987ல் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மிகுந்த சேதமடைந்த நிலையில் உள்ளது. பல்வேறு பத்திரிக்கைகளிலும் இது குறித்து செய்திகள் வந்தது.


இந்நிலையில்ல் சென்னையில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டில் தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதில், கீழக்கரை, வாலிநோக்கம், நயினார்கோயில் மற்றும் பேரையூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதிய காவல் நிலைய கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

செய்தி: திரு. ஷகீல், கீழக்கரை(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)