Thursday, March 15, 2018
ராமநாதபுரத்தில் அமையவுள்ள 'தொழிற்பேட்டையில்” தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் -கலெக்டர்!!
ராமநாதபுரத்தில் அமையவுள்ள 'கடல் உணவு பூங்கா 'தொழிற்பேட்டையில்”
தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நடராஜன்
அறிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது:ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை
ஊராட்சி யில்,
கிழக்கு கடற்கரை சாலையில்குடிசைமாற்று வாரிய குடியிருப்பு
அருகே தமிழ்நாடு சிட்கோ சார்பில், ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா
அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான 100 ஏக்கர் நிலம்
கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வோர், மீன்
எண்ணெய், மீன் உணவு,
நண்டு, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட கடல் உணவு
சார்ந்த தொழில்களை துவங்கலாம். ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாய்
நிலத்திற்கான தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள தொழில் முனைவோர், தொழில் பூங்காவில்
இட ஒதுக்கீடு பெற பெயர் மற்றும் முகவரியுடன் (மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்), தொடங்க
இருக்கும் தொழில் விவரம்,
தேவைப்படும் இடத்தின் அளவு(சென்டில்), மற்றும்
நிலம் வாங்கும் வகை,
வெளிச்சந்தை விற்பனை முறை, அல்லது குத்தகை ஆகிய
விவரங்களுடன்,
பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
கலெக்டர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்
என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு
கூறியுள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் தி.மு.க நலதிட்ட உதவிகள்!!
கீழக்கரையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த
நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமை வகித்தார், இதில்
650 பேர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது,
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள்,
மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)