முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 19, 2018

ராமநாதபுரம் நகரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!!

1 comment :
ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ரோமன்சர்ச் பகுதிக்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் ரோமன் சர்ச் பகுதியில் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு காவிரி குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படு கிறது. இந்தநிலையில் கடந்த பல நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் ரூ.முதல் ரூ.10 கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக தனியார் லாரிகளும் வரவில்லை. தண்ணீர் எடுத்துவரும் பகுதியில் தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளதால் தண்ணீர் எடுக்க முடியவில்லை என்று கூறி தனியார் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் லாரியும் வரவில்லை.

காவிரி தண்ணீர், தனியார் லாரி எதுவும் கிடைக்காததால் நாங்கள் அனைவரும் குடிநீருக்காக சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மார்ச் 26 ல் ராமநாதபுரத்தில் காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் மார்ச் 26 ல் நடக்கவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார் தாலுகாக்களில் காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்காக குறை தீர்க்கும் கூட்டம் நடக்கவுள்ளது. 

கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மார்ச் 26 மாலை 5:15 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் முகவர்கள் பங்கேற்கின்றனர்.


காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாட்டிலேயே முதல் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை!!

No comments :
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. தமிழகத்திலேயே தனுஷ்கோடி பகுதியில்தான் காற்றின் வேகம் எல்லா சீசனிலும் அதிகமாக இருக்கும். கம்பிபாடுக்கும்-அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் ராட்சத டவர் ஒன்று அமைக்கப்பட்டு கடந்த வருடங்களுக்கும் மேலாகவே காற்றின் தன்மை மற்றம் வேகம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் காற்றாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறையின் இணை செயலாளர் பானு பிரதாப் யாதவ்வருகை தந்தார். கம்பிப்பாடுஅரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் காற்றின் வேகத்தை கணக்கிடுவதற்காக வைக்கப் பட்டுள்ள கோபுரத்தை பார்வையிட்டதுடன்அரிச்சல்முனை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனுஷ்கோடி கடலில் காற்றாலை மின்சார திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு காற்றாலை அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில்தான் காற்றாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.300 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 5 இடங்களில் காற்றாலைகளை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காற்றாலையில் இருந்தும் 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதை இலக்காக வைத்துள்ளோம். கடலில் காற்றாலை அமைப்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே மத்திய அரசால் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)