முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 8, 2018

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்; பயனாளிகளுக்கு உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.   

அதனைத் தொடர்ந்து  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் மதுரை மத்திய சிறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருவாடானை கிளைச் சிறையில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த எம்.மாரி என்பவர் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தமைக்காக அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ்  மொத்த கடன் தொகையில் 5சதவீதம் அரசு மானியமாக 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.36ஆயிரத்து 230 மதிப்பிலான கடன் உதவித் தொகையும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மொத்த கடன் தொகையில் 5சதவீதம் அரசு மானியமாக 1 பயனாளிக்கு ரூ.50ஆயிரம் மதிப்பிலான கடன் உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3ஆயிரத்து 460  என மொத்தம் ரூ.7ஆயிரத்து 220 மதிப்பிலான நவீன ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் ப்ரெய்லி கடிகாரம் ஆக மொத்தம் ரூ.3லட்சத்து 93ஆயிரத்து 450 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல்  உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)