முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, June 4, 2018

ஜூன் 5 முதல் 7 வரை நில ஆவணங்களில் கணினி திருத்த சிறப்பு முகாம்: கலெக்டர்!!

No comments :

நில ஆவணங்களில் கணினி திருத்தம் செய்வது தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு சிறப்பு முகாம் இம்மாதம் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்டங்களில் கடந்த 15.5.2018 முதல் 24.5.2018 வரையிலான பணி நாள்களில் துணை ஆட்சியர் நிலை மற்றும் அதற்கு கூடுதலான நிலை அலுவலர்கள் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை முகாம் நடந்தது. இம்முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இதில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக அதிக அளவிலான மனுக்கள் வரப்பெற்றது.திருவாடானையில் நடந்த வருவாய் தீர்வாய் தணிக்கை முகாமில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக கடந்த 31.5.2018 வரை கோரிக்கை மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு வழங்கப்பட்டு அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே திருவாடானை வட்டம் நீங்கலாக மீதமுள்ள 7 வருவாய் வட்டங்களிலும் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நில ஆவணம் 10{1}சிட்டாவில் கணினி திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையிலும், முதுகுளத்தூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமையிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.கமுதியில் பரமக்குடி சார் ஆட்சியர் பா.விஷ் ணு சந்திரனும் கீழக்கரையில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சுஜிபிரமிளாவும்,கடலாடியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மு.மதியழகனும் சிறப்பு | முகாமுக்கு தலைமை வகிக்கின்றனர். பரமக்குடிக்கு சமூகப் பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் காளிமுத்துவும்,ராமேசுவரத்தில் நில அளவைப்பிரிவ உதவி இயக்குநர் சி.ஜெயக்குமார் தலைமையிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் வருவாய் கோட்டங்கள் வாரியாக பரமக்குடி சார் ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஆகியோர் மூலமாக உடனடியாக தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் இம்முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக உடனடி தீர்வு பெற்று பயனடையுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)