முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 24, 2018

ராமநாதபுரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்: 268 பேருக்கு பணி நியமன ஆணை!!

No comments :

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்களுக்கு 258 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் இம்முகாமை நடத்தின.இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்து பல்வேறு நிறுவனங்களின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 268 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள், தொழிற்கல்வி மற்றும் பட்டயக்கல்வி முடித்தவர்கள் என பலரையும் 44 வேலையளிக்கும் நிறுவனங்கள் தேர்வு செய்தன.

முகாமிற்கு வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் மு.கருணாகரன், முகம்மது சதக் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாத்துரை வரவேற்றார். நிறைவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)