முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 4, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் தடையை மீறி பாலிதீன் பைகள்!!

No comments :
ராமநாதபுர மாவட்டத்தில் தடையை மீறி பாலிதீன் பைகள், கவர்கள் தாராளமாக கடைகளில் புழக்கத்தில் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 2019 ஜன.,1 முதல் முழுமையாக தடை செய்யப்படும், என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், டீ கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த மாவட்டங்களில் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் நிரந்தர தடை விதித்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார். ஆனால், நான்கு நாட்களை கடந்தும், பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் பயன்பாடு தாராளமாக உள்ளது.
குறிப்பாக சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், மீன் கடைகள், தெருவோர கடைகளில் மறைத்தும், நேரடியாகவும் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரம் அரண்மனை, சாலைத் தெரு, வண்டிக்கார தெருவில் அதிகளவில் இன்னும் புழக்கத்தில் உள்ளன.


பாரதிநகர் பஸ்ஸ்டாப் அருகே உள்ள டீக்கடைகளில் கேரி பைகளில் பார்சல் டீ கொடுப்பது தொடர்கிறது. பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்தவும், அபராதம் விதிப்பதை கடுமையாக்கினால் மட்டுமே பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இதுகுறித்து, கலெக்டர் நடராஜனிடம் கேட்ட போது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க துணை கலெக்டர், உதவி இயக்குனர் நிலையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, என எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூலை 15 முதல் முதற் கட்டமாக 500 ரூபாய்க்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் 1000 ரூபாய்க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)