முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 5, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் காலாவதியான அரசு போக்குவரத்துக்கழக பஸ்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பகோணம் மண்டலத்தில், காரைக்குடி கிளை அலுவலகத்தில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான பின்பும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பயணிக்கும் பயணிகள் திகிலுடன் பயணிக்கும் அவல நிலை உள்ளது. பல பஸ்களில் இருக்கைகள் கயிறுகளால் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதில் பல பஸ்கள் பாதி வழியிலேயே பழுதாகி நின்று விடுகிறது. பின் வேறு பஸ்களில் பயணிகள் ஏற்றிவிடப்படுகின்றனர்.அரசு பஸ்களை கண்டாலே மக்கள் அச்சம் கொள்ளும் நிலையில் தான்
உள்ளன. பல பஸ்களில் பக்கவாட்டு தகரங்கள், உடைந்து சேதமடைந்த நிலையில் இயக்கப்படுகின்றன. இது போன்று காயிலான் கடைக்கு செல்ல வேண்டிய பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கி
வருகிறது.

பல பஸ்களில் சேதமடைந்த பகுதிகளை ஒட்டுப்போட்டு, இயக்கி வருகின்றனர்.

இப் பஸ்களால் ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பயந்து கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஓட்டும் நிலையும் உள்ளது.

இது போன்ற பஸ்களை இயக்கப்படும் போது, விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், முறையாக பராமரிப்பு செய்து, மக்களுக்கு இடையூறு இல்லாத பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி; தினசரி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)