Tuesday, September 25, 2018
ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தள்ளுபடி விற்பனை!!
ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீதம் தள்ளுபடியில் தீபாவளி விற்பனையை கலெக்டர் வீரராகவ ராவ் துவக்கி
வைத்தார்.
அவர் கூறியதாவது:
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு
ஆண்டுதோறும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை
செய்கிறது.
தீபாவளியை முன்னிட்டு பட்டு, பருத்தி, கைத்தறி
ரகங்களுக்கு 30
சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்த தீபாவளிக்கு 70.91 லட்சம் விற்பனை
செய்யப்பட்டது. இந்த ஆண்டு 85 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
என்றார்.
கோ_ஆப்டெக்ஸ்(அரசு திட்டம்) மேலாளர் பழனிச்சாமி, வடிவமைப்பு மற்றும்
உற்பத்தி பிரிவு மேலாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)