முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Wednesday, October 24, 2018

ராமநாதபுரம் ஐஏஎஸ். அகாதெமியில் குரூப்.2 பணிக்கான மாதிரித்தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ். அகாதெமியில் நவம்பர் 4 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி. குரூப்.2 பணிக்கான மாதிரித்தேர்வு இலவசமாக நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அகாதெமியின் நிறுவனர் டி.சுகேஷ்சாமுவேல் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: -

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் அகாதெமி கல்விச்சேவை செய்து வருகிறது. இங்கு வரும் நவம்பர் 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பதவிக்கான மாதிரித்தேர்வு நடைபெறவுள்ளது.இதில் தமிழகத்தின் அனைத்துப் போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அகாதெமியின் பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள், விரிவான விளக்கங்களுடன் விடைகள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கென 7550352916 மற்றும் 7550352917 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

செய்தி: கீழை தாஹீர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 முக்கிய அலுவலர்கள் இடமாற்றம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 11 அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பணியிட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள அலுவலர் பெயர், பதவி மற்றும் முன்பு பணியாற்றிய பதவி (அடைப்புக்குறிக்குள்) விவரம்:

பொன்.கார்த்திகேயன்- ராமநாதபுரம் வட்டாட்சியர் (ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர்)

தமீம்ராஜா- ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் (ராமநாதபுரம் ஆயத்துறை மேற்பார்வை அலுவலர்)

பி.சேகர்- திருவாடானை வட்டாட்சியர் (முதுகுளத்தூர் சமூகப்பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்)

ஹரி.சதீஷ்குமார்- ராமநாதபுரம் ஆய மேற்பார்வை அலுவலர் (கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர்)


சாந்தி- உப்பூர் அனல் மின் திட்ட நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியர் (திருவாடானை வட்டாட்சியர்)

சபீதாள்பேகம்- பரமக்குடி நத்தம் நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் (உப்பூர் அனல் மின் திட்ட நில எடுப்புப்பிரிவு வட்டாட்சியர்)

சிக்கந்தர் பபிதா- கமுதி வட்டாட்சியர் (பரமக்குடி நத்தம் நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர்)

சுரேஷ்குமார்- ராமநாதபுரம் பேரிடர் மேலாண்மைத்துறை தனி வட்டாட்சியர் (மாவட்ட ஆயத்துறை அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர்)

சரவணன்- கீழக்கரை வட்டாட்சியர் (ராமநாதபுரம் பேரிடர் மேலாண்மைத்துறை தனி வட்டாட்சியர்)

ராஜேஸ்வரி- முதுகுளத்தூர் சமூகப்பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் (கீழக்கரை வட்டாட்சியர்).


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)