வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Thursday, February 7, 2019

இலவச தையல் இயந்திரம் பெற பிப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்களுக்கு, மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. 

தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், வருமானச்சான்று, இருப்பிடசான்று, தையல் பயிற்சி சான்று, கல்வி சான்றிதழ்கள், பாஸ்போட் சைஸ் புகைப்படம் 2, உள்ளிட்ட உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை 
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
ராமநாதபுரம் 

என்ற முகவரியில் பிப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம். என மாவட்ட சமூகநலத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment