(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 7, 2019

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 புதிய பஸ்கள்!!

No comments :
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 500 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைத்தார்.

அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 22 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 பஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்களை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல ராமநாதபுரம் நகர் கிளையின் மூலம் தெற்குத்தரவை வரை செல்லும் பஸ்(வழித்தட எண்–17) பள்ளி மாணவர்களின் வசதிக்காக வள்ளிமாடன்வலசை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் புறநகர் கிளையின் மூலம்
ராமேசுவரம்–சிதம்பரம் வழித்தடத்தில் ஒரு பஸ்சும்,
ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும்,
ராமேசுவரம்–பழனி வழித்தடத்தில் ஒரு பஸ்சும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும்
ராமநாதபுரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும்,
பரமக்குடி–தஞ்சாவூர் வழித்தடத்தில் 2 பஸ்களும்,
கமுதி–திருச்சி வழித்தடத்தில் 2 பஸ்களும்,
முதுகுளத்தூர்–மதுரை வழித்தடத்தில் ஒரு பஸ் இயக்கப்படுகிறது.

அதன்படி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 புதிய பஸ்களும், இரண்டாம் கட்டமாக 12 புதிய பஸ்களும், மூன்றாம் கட்டமாக 11 புதிய பஸ்களும், நான்காம் கட்டமாக 9 புதிய பஸ்களும், தற்போது புதிய பஸ்களும் என 5 கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment