(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 11, 2019

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம்!!

No comments :
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை தற்போதுதான் வெளியிட்டது.

வருகின்ற லோக்சபா தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட் சின்னத்தை வைத்து, கமல்ஹாசன் தமிழக அரசியலில் புதிய ஒளி பாய்ச்சுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருப்பப்பட்ட சின்னங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே டார்ச் சின்னம் பெறுவது குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அதேபோல் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கமல்ஹாசன் தெரிவித்து வருகிறது. அரசியலை சுத்தம் செய்ய போகிறேன் என்று கமல்ஹாசன் கூறி வருகிறார். இந்த நிலையில் அரசியலில் ஒளி ஏற்றும் விதமாக அவரது பேச்சுக்கு ஏற்றபடி தற்போது டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த சின்னத்தை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அவரது அரசியல் திறமை தெரிய வரும். இதை அவர் எப்படி பிரபலப்படுத்துவார் என்று காலம்தான் பதில் சொல்லும். சின்னத்தின் பொருளுக்கு ஏற்றபடி தமிழகத்தில் ஒளி பாய்ச்சுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கலாம்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment