(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 27, 2019

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதியில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏராளமானோரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதி மேலக்கோட்டை இளமனூரைச் சேர்ந்த மாரி உள்ளிட்ட ஏராளமானோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பது:
கீழக்கரையைச் சேர்ந்த அகமது அப்துல்காதர், வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பல லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும் பணம் கொடுத்தவர்களிடம் பெறப்பட்ட கடவுச்சீட்டுகளையும் திருப்பித் தரவில்லை . இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment