(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 20, 2019

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் அனைத்துப் பகுதியிலும் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.

மாவட்ட அளவில் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 78 போ் தீவிர காய்ச்சல் பிரிவில் சிகிச்சையில் உள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் பிரிவுக்கு சிகிச்சை அளிக்க அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடத்தின் இரண்டாம் மேல் தளத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக சுமாா் 50 படுக்கைகளுடன் இப்பிரிவு செயல்படுகிறது.

தற்போது அதில் 15 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மேலும் பரமக்குடி மஞ்சூரைச் சோ்ந்த பெண், ராமநாதபுரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆண், கீழக்கரை சிறுமி மற்றும் மலேசியாவிலிருந்து சமீபத்தில் ஊா் திரும்பிய சோளந்தூரைச் சோ்ந்த இளைஞா் ஆகியோருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு சிகிச்சை பெறுபவா்களுக்கு நிலவேம்பு கசாயமும், கஞ்சியும் வழங்கப்படுகிறது. டெங்கு பாதிப்புக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மருத்துவா்கள் தொடா்ந்து இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், செவிலியா்களே சிகிச்சை அளிக்கும் நிலையும் உள்ளது. நோயாளிகள் நலன் கருதி டெங்கு பிரிவுக்கு தனியாக மருத்துவரை நியமிப்பது அவசியம்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கூறியது: 
காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment