Sunday, October 20, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பால் விபத்துக்கள், மரணங்கள் அதிகரிப்பதை
தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி.,
யிடம் மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இன்று இளைஞர்களை வெகுவாக மழுங்கடிக்கும்
போதை பொருள்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப்
பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துக்களும், பல்வேறு சமூக தீங்குகளும்
நடக்கின்றன. அதனை பயன்படுத்துபவர்கள் மட்டு மின்றி அவர்களின் குடும்பம், பகுதி, மாவட்டம்,
என நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டையாக உள்ளது.
கீழக்கரை கப்பலடி கடற்கரைப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட
இளைஞரை அப்பகுதி ரோந்து போலீசார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.
போதை பொருள்களில்
இருந்து மக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment