(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 30, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019-20 ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.உலக மகளிர் தின விழா மார்.8ல் கொண்டாடப்படுகிறது.


2020ம் ஆண்டிற்கான உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு தகுதியானவர்களிடம் இருந்து கருத்துருக்கள் டிச.31க்குள் வரவேற்கப்படுகின்றன.



தமிழகத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.


தகுதியானவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.

கூடுதல் தகவலுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment