முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 7, 2019

ராமநாதபுர மாவட்டத்தில் 3,60,212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு!!

No comments :
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய வருவாய் வட்டங்களுக்குள்பட்ட நியாய விலைக் கடைகளில் கூட்டுறவுத் துறையின் சார்பாக சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000, விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கலந்து கொண்டு 3,60,212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 மற்றும் 2,34,358 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் பணிகளைத் தொடக்கி வைத்து பேசியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் மொத்தம் 3,50,212 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வருவாய்த்துறையின் மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,94358 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் பணிகளும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.



இவை எந்தெந்த தேதியில் எந்தெந்த கிராம குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படவுள்ளது என்பது குறித்த விபரங்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தேதி வாரியாக அட்டவணை தயார் செய்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மக்கள் பார்வைக்கு வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தமிழர்கள் 518 பேருக்கு முதல் முறையாக இந்த பொங்கல் பரிசுப்பொருள்களுடன் ரூ 1000 வழங்கப்படுகிறது என்றார்.
இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.மதியழகன்,ராம்கோ கூட்டுறவுத் தலைவர் | கே.முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பரமக்குடி பாரதிநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். பிசிஎம்எஸ் சங்க தலைவர் எம்.கே.ஜமால், முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், நகர செயலாளர் எஸ்.வி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.மணிகண்டன்,

பரமக்குடி வட்டத்தில் உள்ள  69,340 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.


விழாவில் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வடிவேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.பாதுஷா, ஒன்றிய செயலாளர்கள் கே.முத்தையா, ப.குப்புச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கூட்டுறவு பதிவுத்துறை இணை இயக்குநர் முருகேசன் வரவேற்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)