Tuesday, January 22, 2019
ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான சாலை பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்!!
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான சாலை பணிகளை அமைச்சர் டாக்டர்மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு
நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் மொத்தம் 15.48 கி.மீ நீள அளவிலான பல்வேறு
சாலைப்பணிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளிலுள்ள பழுதடைந்த சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்
உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக 5 சிப்பங்களாக
மொத்தம் ரூ.10
கோடி மதிப்பில் 15.48 கி.மீ நீள அளவிலான
சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்திடும் விதமாக பூமி
பூஜை விழா நடைபெற்றுள்ளது. அதேபோல, ராமநாதபுரம் நகரத்தின்
பிரதான சாலையான அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலையினை ரூ.34 கோடி மதிப்பில் மேம்படுத்திட ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
விரைவில் பணிகள் துவங்கப்படும்.
மேலும், ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட
சிதம்பரம்பிள்ளை ஊரணியில் பொதுமக்கள் நலனுக்காக, எனது சட்டமன்ற
உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ.54
லட்சம் மதிப்பில் ஊரணியின் வடக்கு கரையில் சுற்றுச்சுவர், பேவர்பிளாக்
பதிக்கப்பட்ட நடைபாதை,
நுழைவுவாயிலில் அலங்கார வளைவு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை
அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.மடை
கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்புல்லாணி, மண்டபம் மற்றும்
ராமநாதபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் கிராம சாலைகள்
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அ.வீரமுத்துக்குமார், நகராட்சி
உதவி பொறியாளர் எம்.சுப்பிரமணிய பாபு உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:
தினபூமி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)