முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, February 22, 2019

கீழக்கரை கடைகளில் தடைசெய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 5 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்!!

No comments :
கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் மீண்டும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், கப்புகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் தனலட்சுமிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.


இதையடுத்து ஆணையர் தலைமையிலான குழுவினர் வி.எஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


ஆய்வின் போது நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி, நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்ட உதவி மையம்!!

No comments :
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்ட உதவி மையம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டப் பயிற்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு ஆணைக்குழு வழக்குரைஞர்களுடன் சேர்ந்து உதவி செய்யும் வகையில் சட்டக் கல்லூரி வளாகத்தில் சட்ட உதவி மையம் தொடக்கிவைக்கப்பட்டது.


இந்த மையத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ.கயல்விழி திறந்து வைத்தார்.

பின்னர் மையத்தில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 

ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கலாம்.

இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)