முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 7, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கும், அவர்கள் வருவாய் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளன.ஆகவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களும்


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 புதிய பஸ்கள்!!

No comments :
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 500 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைத்தார்.

அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 22 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 பஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்களை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல ராமநாதபுரம் நகர் கிளையின் மூலம் தெற்குத்தரவை வரை செல்லும் பஸ்(வழித்தட எண்–17) பள்ளி மாணவர்களின் வசதிக்காக வள்ளிமாடன்வலசை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் புறநகர் கிளையின் மூலம்
ராமேசுவரம்–சிதம்பரம் வழித்தடத்தில் ஒரு பஸ்சும்,
ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும்,
ராமேசுவரம்–பழனி வழித்தடத்தில் ஒரு பஸ்சும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும்
ராமநாதபுரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும்,
பரமக்குடி–தஞ்சாவூர் வழித்தடத்தில் 2 பஸ்களும்,
கமுதி–திருச்சி வழித்தடத்தில் 2 பஸ்களும்,
முதுகுளத்தூர்–மதுரை வழித்தடத்தில் ஒரு பஸ் இயக்கப்படுகிறது.

அதன்படி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 புதிய பஸ்களும், இரண்டாம் கட்டமாக 12 புதிய பஸ்களும், மூன்றாம் கட்டமாக 11 புதிய பஸ்களும், நான்காம் கட்டமாக 9 புதிய பஸ்களும், தற்போது புதிய பஸ்களும் என 5 கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வீரர், வீராங்கனைகள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநிலத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ்
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான கால கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.குழு போட்டிகளாயின் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் 3 இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுகள் கட்டமைப்பு இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வருகிற 12–ந்தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.


இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)