Monday, March 18, 2019
SBI வங்கிகளில் ஏ.டி.எம். அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!!
பாரத ஸ்டேட் வங்களிகளில் இனி ஏ.டி.எம். அட்டை இன்றி ரகசிய
குறியீட்டு எண் மூலம் பணம் எடுக்கும் முறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு, கமுதியில்
உள்ள வாடிக்கையாளர்களுக்கு செயல்விளக்கமாக செய்து காட்டப்பட்டது.
இதுவரை ஏ.டி.எம். இயந்திரங்களில் ஏ.டி.எம். அட்டை மூலம்
மட்டுமே பணம் எடுக்கும் முறை அமலில் இருந்தது. தற்போது ஒருவர் தனக்கு வேண்டிய
நபருக்கு பணத்தை அனுப்ப ஏ.டி.எம். இயந்திரத்தில் வங்கிக் கணக்கு எண், தொகை
மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பதிவு செய்து, இந்த
ரகசிய எண்ணை நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவரிடம் கூறிவிட்டால் அந்த எண்ணை
பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை ஏ.டி.எம். அட்டை இல்லாமல் எடுத்துக்
கொள்ளலாம்.
இவ்வசதி இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமுதி பாரத ஸ்டேட் வங்கியில் இத்திட்டத்தின்
அறிமுக விழா திருச்சி மண்டல தலைமை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கமுதி
கிளை மேலாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் வாடிக்கையாளர்களுக்கு
ஏ.டி.எம். அட்டை இன்றி ரகசிய எண் மூலம் பணம் எடுக்கும் முறை செயல் விளக்கம் மூலம்
செய்து காட்டப்பட்டது.
செய்தி:
தினசரிகள்
(செய்திகள், விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்.)