முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 30, 2019

ராமநாதபுரத்தில் அக்-3ம் தேதி வங்கி கடன் சிறப்பு முகாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) வங்கிகள் மூலம் கடன் வழங்கவும், வாங்கிய கடனை ஒரே தவணையில் செலுத்தவும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கடன் வழங்குதல் மற்றும் ஒரே தவணையில் கடனை அடைத்தல் விழா வரும் அக்டோபர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.



மத்திய அரசின் பரிந்துரைப்படி, வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன், சிறு, குறு தொழில் மற்றும் வணிகர்க க்கு வழங்கப்படும் முத்ரா கடன் மற்றும் மகளிர் திட்டம் மூலமாக தகுதியுள்ள மற்றும் புதிய மகளிர் குழுக்களுக்கும் கடன் வழங்கப்படவுள்ளது.

மேலும் என்கெனவே வங்கியில் கடன் வழங்கப்பட்டு வராக்கடனில் உள்ள வங்கிக் கடன்கள் ஒரே தவணையால் கடனை அடைத்தல், வங்கிகளின் பிற சேவைகள் மற்றும் விவரங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். வங்கி சாரா நிதி நிறுவனங்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் முகாமில் கலந்து கொண்டு தங்கள் தொழிலுக்கு ஏற்ற கடன்களை பெறலாம்


என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;