முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 2, 2019

ராமநாதபுரத்தில் நகர் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்-ஆப்; 24 மணி நேரத்தில் நடவடிக்கை நகராட்சி கமிஷனர் உறுதி!!

No comments :

  
ராமநாதபுரம் நகர் பகுதியில் மின் விளக்குகள் பழுது, பாதாள சாக்கடை உடைப்பு உள்ளிட்ட பொது மக்களின் குறைகளை நகராட்சி கமிஷனரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
ராமநாதபரம் நகர் பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. நகரின் தண்ணீர் தேங்கும் பகுதிகளாக 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கனமழை, வெள்ளம் ஏற்பட்டால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மழைக்கால தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொசுத்தடுப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுமருந்து தெளித்து வருகின்றனர்.



நகராட்சி பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் இருப்பது,
பொது சுகாதாரம் பாதிப்பு,
தெருவிளக்கு எரியாதது,
பாதாளசாக்கடை உடைப்பு,
குடிநீர் பிரச்னை

ஆகிய பொது பிரச்னைகளை நகர் மக்கள் 73973 82164 என்ற எனது (நகராட்சி கமிஷனர்) அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ அந்த இடம் குறித்து தெளிவான விளக்கங்களுடன் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;