முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 31, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் அடைமழை; நிறையும் நீர்நிலைகள்!!

No comments :
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது. தீபாவளி அன்று இரவில் தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ச்சியாக விட்டுவிட்டு அடை மழையாக பெய்து வருகிறது. முதலில் இரவில் மட்டுமே பெய்து வந்த மழை நேற்று பகலிலும் பலத்த காற்றுடன் அடைமழையாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் அதிகஅளவில் தண்ணீர் சேர்ந்து வருகிறது. ஒருசில நீர்நிலைகள் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் சேர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் வெட்டப்பட்டு காட்சிப்பொருளாக இருந்த பண்ணைக் குட்டைகளில் இந்த தொடர் மழையால் தண்ணீர் சேர்ந்துள்ளது. பல பண்ணைக் குட்டைகள் நிரம்பி பார்க்கவே மகிழ்ச்சி தரும்வகையில் காட்சி அளிக்கிறது.



வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை முதலே தங்களின் விவசாய நிலங்களில் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியாக வெடிப்பு ஏற்பட்டு காணப்பட்ட வயல்வெளிகள் எல்லாமல் பயிர்கள் வளர்ந்து காணப்படுவது காண்பவர்களின் மனதை கவரும் வகையில் உள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கடலாடி-67,
கமுதி-60.30,
முதுகுளத்தூர்-40,
வாலிநோக்கம்-35,
ராமநாதபுரம்-33,
திருவாடானை-29.2,
பாம்பன்-29.2,
ராமேசுவரம்-25.2,
தீர்த்தாண்டதானம்-26,
மண்டபம்-24.6,
தங்கச்சிமடம்-24.5,
தொண்டி-20,
வட்டாணம்-10,
ஆர்.எஸ்.மங்கலம்-16,
பரமக்குடி-16.8,

பள்ள மோர்குளம்-18.5.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் நாளை நவ-1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியா்கள், அலுவலா்களைத் தோ்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுவருகின்றன.



இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்துவா்கள் முதல் பட்டம் பயின்றவா்கள் வரை பங்கேற்கலாம். இதில் பிரபல தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கல்வித்தகுதி உடையவா்களை தோ்வு செய்து பணி ஆணையும் வழங்கி வருகின்றனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.


வெள்ளிக்கிழமை (நவ.1) காலையில் அனைத்துக் கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுர மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து "வாட்ஸ்–அப்" -ல் புகார் தெரிவிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் கூறியதாவது:–

ராமநாதபுரத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழைநீர் பல பகுதிகளில் தேங்கி நிற்பதாக புகார் வந்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் 3 இடங்களில் தூர்ந்து காணாமல் போன வடிகால்களை கண்டுபிடித்து அதன்வழியாக மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகள் பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள், மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆண்டுதோறும் நகரசபை பொறியியல் பிரிவினர் கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் நகரசபை பகுதியில் அதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.



இதுதவிர, நகராட்சி எல்லை பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் எனது செல்போன் வாட்ஸ்–அப் 7397382164 எண்ணுக்கு அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும். மேலும். பாதாள சாக்கடை மூடிகள் உடைந்திருந்தாலோ, திறந்திருந்தாலோ இதே எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைகாலம் என்பதால் மழைக்கால தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மழைநீர் செல்லமுடியாத அளவிற்கு வடிகால்கள் பலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடும்நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.