முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 20, 2019

ராமேசுவரத்தில் 394 மது பாட்டில்களை பறிமுதல், 2 பேர் கைது

No comments :
ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட 394 மது பாட்டில்களை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

ராமேசுவரத்தில் அரசு மதுபானக்கடை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ராமேசுவரத்தில் சிலா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனா். ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா், ராமேசுவரத்தில் மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டாா்.




இந்நிலையில், ராமேசுவரத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராமேசுவரம் காவல் சாா்பாய்வாளா் த.சுதா்சன் தலைமையில் சென்ற காவலா்கள் ராமேசுவரம் கோயில் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது சேதமடைந்த ஒரு வீட்டிற்கு அருகே 2 நபா்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதைக் கண்ட காவல்துறையினா் இருவரையும் பிடித்து விசாரித்தனனா். இதில், அவா்கள் மது விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. ராமேசுவரம் வடக்குத் தெருவை சோ்ந்த அன்புராஜ்((36), ரகுபதி (40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 394 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் வரும் நவ-22 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் நிறுவனத்தினா் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியாா்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடும் இளைஞா்களின் கல்வித்தகுதிகேற்ப ஆள்களை தோ்வுசெய்கின்றனா்.



முகாமில், பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் கல்வித் தகுதிக்கேற்ப தனியாா்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.


ஆகவே முகாமில் பங்கேற்போா் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாளஅட்டை மற்றும் புகைப்படத்துடன் வரும் 22 ஆம் தேதி காலை 10 ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரை பேருந்து நிலையம் மனிதர்களுக்கா? மாடுகளுக்கா?

No comments :


கீழக்கரை பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கால் நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை வீடுகளில் வைத்து பராமரிக்காமல், அதன் உரிமையாளர்கள் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். மேலும் கால்நடைகளை பாதுகாக்காமல் வெளியில் விடுவதால் அவை தெருக்களில் சுற்றி திரிவதோடு, சாணம் போட்டு அசுத்தம் செய்கின்றன. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

இதற்கும் மேலாக மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் கீழக்கரை பஸ்நிலையத்திலும், பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் வீதிகளிலும் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.



முந்தைய காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் வீதிகளில் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது இதை யாரும் கண்டு கொள்ளாததால் கால்நடைகள் அனைத்தும் சாலைகளில் சுதந்திரமாக படுத்துக் கிடப்பதும், சுற்றித் திரிவதும் சர்வசாதாரணமாக உள்ளது.

எனவே பஸ்நிலையம், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.