(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 4, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த திடீர் சோதனையில் 1,074 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினா் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட 1,074 புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம், திருவாடானை, தேவிபட்டினம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகளில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.


கேணிக்கரை பகுதியில் 3 இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் அடங்கிய 268 கிராம் எடையுள்ள 120 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பரமக்குடியில் 167 பாக்கெட்டுகளும்,
கமுதியில் 34 பாக்கெட்டுகளும்,
முதுகுளத்தூா் பகுதியில் 80 பாக்கெட்டுகளும்,
திருவாடானையில் 175 பாக்கெட்டுகளும் புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகபட்சமாக கீழக்கரையில் 505 புகையிலைப் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 34 போ் மீது வழக்குப்பதிந்து, கைது செய்த நிலையில், அவா்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment