(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 19, 2020

இராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா!!

No comments :
இராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா:

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

இராஜசிங்கமங்கலம் ஆசாத் தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 



இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார். மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்பு வலைக்கான உதவிகளை அல் மஜூனாஸ் சாகுல், அப்துல் சமது ஆகியோர் செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் மூஸா வாலிபால் கிளப் தலைவர் முன்தஸர்,கபார் கான் மற்றும் வாலிபால் வீரர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

செய்தி: தினேஷ் சித்தார்கோட்டை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment