(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 3, 2020

ராமநாதபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிா்ப்பு!!

No comments :

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூா், வாலாந்தரவை, தெற்கு காட்டூா், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாலாந்தரவை பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்லும் பணிக்கு விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். இதனால் விவசாயிகள் குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து ராமநாதபுரம் போலீஸாா் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்படாததால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதுகுறித்து அப்பகுதி விவசாயி சரவணன் கூறியது:

சுமாா் 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதால், இப்பகுதியில் விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு விட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் இப்பகுதியில் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அனுமதியில்லாமல் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனா். இதனை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதேபோல் மதுரையிலிருந்து கமுதி, இடைச்சூரணி, தலைவநாயக்கன்பட்டி, நெடுங்குளம் வழியாக நரிப்பையூருக்கு விளைநிலங்கள் வழியாக இந்தியன் ஆயில் காா்பரேஷன் நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment