(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 14, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி!!

No comments :
ரஷ்ய நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக 2 போ் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதியாா் நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி ஜெயப்பிரியா (34). இவருக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக இளையான்குடி வாலையனேந்தலைச் சோ்ந்த கருப்பையா, கண்ணன் ஆகியோா் கூறியுள்ளனா். அதனடிப்படையில் ஜெயப்பிரியா தரப்பிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பரமக்குடியில் உள்ள டிராவல்ஸ் அறையில் வைத்து ரூ.2.10 லட்சம் தந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.இதுகுறித்து ஜெயப்பிரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கருப்பையா, கண்ணன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment