(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 28, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்றவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர்களில் 5 பேர் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,432 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 15 பேருக்கு கரோனா தொற்று உள்ளது தெரியவந்தது. 


அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலமாகவும், சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகவும்

கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 2 பேர்,
பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 3 பேர்
என மொத்தம் 5 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, பரமக்குடியைச் சேர்ந்த 2பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 15 பேரில் 7 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment