Sunday, November 15, 2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி விற்பனை கடும் பாதிப்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் தீபாவளி விற்பனை பாதிக்குப்பாதியாக ரூ.2 கோடி
வரை குறைந்து விட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, வீட்டுஉபயோக பொருட்கள்,
பட்டாசு, ஸ்வீட்கடைகளில் வியாபாரம் ரூ.4கோடி வரை நடைபெறும். ஆனால் இவ்வாண்டு கொரோனா
பரவல் தடுப்பு ஊரடங்கால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது.
இதனால்
எதிர்பார்த்த அளவிற்கு தீபாவளி விற்பனை இல்லை. பட்டாசு, ஜவுளி வியாபாரத்தில் ரூ. பல
லட்சம் மதிப்பிலான சரக்கு தேக்கமடைந்துள்ளன. கடன் வாங்கி முதலீடு செய்த வியாபாரிகள்
பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி;
தினசரிகள்
No comments :
Post a Comment