Tuesday, February 4, 2020
முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!
இளைஞர்
நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் வழங்கப்படும் முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் பன்னாட்டு அளவில் பதக்கங்கள்
பெற்று சிறந்து விளங்கும்
2
ஆண்கள் 2 பெண்கள் என விளையாட்டு வீரர்கள்,
2
சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு
முதல்வர்
மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பதக்கம்
மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக
விருது வழங்குவதற்கு முந்தைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இது
தவிர, விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தும்
ஒரு
நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக
நன்கொடை அளித்தவர். ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியாருக்கு முதல்வர் மாநில விளையாட்டு விருது
வழங்கப்படுகிறது.
விண்ணப்ப
படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in இணைதளம் மூலம் பெற்றுகொள்ளலாம்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த திடீர் சோதனையில் 1,074 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினா் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தி,
தடை செய்யப்பட்ட 1,074 புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம்,
திருவாடானை, தேவிபட்டினம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும்
கடைகளில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
கேணிக்கரை
பகுதியில் 3 இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் அடங்கிய 268 கிராம் எடையுள்ள
120 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பரமக்குடியில்
167 பாக்கெட்டுகளும்,
கமுதியில்
34 பாக்கெட்டுகளும்,
முதுகுளத்தூா்
பகுதியில் 80 பாக்கெட்டுகளும்,
திருவாடானையில்
175 பாக்கெட்டுகளும் புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகபட்சமாக
கீழக்கரையில் 505 புகையிலைப் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தடை
செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 34 போ் மீது வழக்குப்பதிந்து, கைது செய்த
நிலையில், அவா்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள்
தெரிவித்தனா்.
செய்தி: தினமணி
செய்தி: தினமணி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.