முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 8, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் ACTIVESHOP செயலி; நம்ம ஊரு ’ஆப்’, நம்பிக்கையான ‘ஆப்’!!

No comments :
ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மக்களின் பயன்பாட்டிற்கு உங்கள் Activeshop App ஐ டவுன்லோட் செய்து... 
நீங்கள் இருந்த இடத்தில் இருந்து அனைத்து விதமான பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.கைபேசி செயலி மூலம் உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் “ACTIVESHOP” தற்போது நமது கீழக்கரையில்..!!

ஆன்லைன் மூலம் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள், கை குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், உணவு வகைகள், மருந்துகள், ஆடை வகைகள் போன்ற அனைத்தையும் எங்கள் செயலி மூலம் தேர்வு செய்யுங்கள்.. உங்கள் வீட்டு வாசல் வரை எங்களின் சேவை தொடரும்..!!

உங்களின் ஆடரை நீங்களே கூகுள் மேப் மூலம் கண்காணிக்கலாம்..!! குறித்த நேரத்தில், தாமதமின்றி உங்களை நாங்கள் வந்து சேருவோம்..!!

வீடியோ:இப்போதே டவுன்லோட் பண்ணுங்கள்:

ActiveShop Google Play store App Download Link : bit.ly/2XvJFqo

ActiveShop IPhone App Download Link : bit.ly/2OSj42K


Ramanathapuram stores

Restaurants
1. Ibrizz Kitchen
2. Sri Aiswarya Hotel
3. Hotel Vasantham
4. Bheemas idly Dosa corner
5. Hotel Aiswarya Lakshmi
6. Kida Kari
7. Hotel Chola
8. Hotel Akshayabhavan
9. shree Hotel
10. Hotel Chickkin
11. Restoran Thoulath Maju

Juices & Beverages
1. Koyembed Fresh Juice
2. Lassi Spot

Supermarket
1. RK Supermarket
2. Koyembed Market

Building Materials
1. Asian Building Materials Pvt Ltd

Furniture
1. Life & Living Furniture
2. Budget Furniture

Stationaries
1. Erbath Stationaries
2. Samy Stationeries

Opticals
1. MyMoon Opticals

Bakeries

1. Aiswaryaas Bakerys - Kenikarai
2. Aiswaryaass bakeries - Bharathi Nagar
3. Aiswarya S Bakeroes - Salam Street
4. Aishwarya bakeries- Aranmanai

Pharmacy
1. Bawaa Medicals

Clothes
1. Boo Bros men’s wear
2. FashionScope

Keelakarai Stores

Restaurant
1. Gopi idli Kadai
2. My Chicken Express
3. Maraikas Sandwich Cafe
4. Ra Kitchen
5. Al Sulthan Fast Food
6. AVT Fried Chicken
7. Masha Allah Fast Food

Bakeries
1. Raviath Sweet Palace
2. Kilakarai Sellakani Thothal & Halwa

Super Market
1. BH bazaar
2. Indian SuperMarket

Hardware Shop
1. New Chennai Hardware

Pharmacy
1. Ibrahim medical
2. Dheen Medicals

Common Store
1. Mamy Poko Diapers Shop
2. Mobile Case Shop
3. Idiappam Kadai
4. Organic Muttai Kadai
5. SM Maasi kadai
6. Seeni Kadalai kadai

Juices and beverages
1. Madurai Jigarthanda
2. Al Ihsan Cool drinks
3. Lassi Spot

Clothes
1. AS Lungies


முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்!!
உங்கள் வியாபரம் பல்கிப்பெருகட்டும்!!

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு "சீல்"!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாத பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.


ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்ட செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை நகராட்சி நிர்வாகம் வட்டியுடன் நபார்டு வங்கிக்கு செலுத்தி வருகிறது. அத்துடன், குடிநீர் விநியோகத்திற்கான பராமரிப்பிற்காக மாதா மாதம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.10 லட்சம் நகராட்சி செலுத்துகிறது.


அத்துடன், மக்களுக்கான ரோடு வசதி, தெரு விளக்கு வசதிகளுடன், நகராட்சி ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.நகராட்சி செலவினத்தை சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை வரிகள், நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் இருந்து பெறப்படும் வாடகை வசூல் மூலம் ஈடு செய்யப்படுகிறது.நகராட்சிக்கான சிறப்பு நிதி வழங்கப்படாத நிலையில், வரி வசூல் மூலம் நகராட்சியில் நலத் திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அலுவலர்கள் கூறுகின்றனர். நகராட்சியில் கடந்தாண்டு நிலுவைத் தொகையுடன் ரூ.17 கோடி வருவாய் பாக்கி வர வேண்டி உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக சொத்து வரி உள்ளிட்டவை மூலம் ரூ.7 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.


குடிநீர் கட்டண வரியாக ரூ1.50 கோடியும், பாதாள சாக்கடை இணைப்பு வரியாக ரூ.1.60 கோடியும்,தொழில் வரி ரூ.25 லட்சமும் நிலுவை உள்ளது.நகராட்சியில் நடப்பு ஆண்டு வருவாய் 60 சதவீதம் வந்துள்ளதாகவும், நிலுவைத் தொகை 40 சதவீதம் வர வேண்டியுள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடல் பகுதியில் உள்ள கடைகளில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாத 10 க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.