முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 3, 2020

ராமநாதபுரத்தில் மருத்துவருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 91-ஆக உயர்ந்தது!!

No comments :
ராமநாதபுரத்தில் மருத்துவமனை நடத்தி வரும் இருதயநோய் சிகிச்சை டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் விடுவிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த தனியார் ஆஸ்பத்திரி பூட்டி சீல்வைக்கப்பட்டு அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.